ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், 18 கோடி ரூபாய் செலவில், பிரம்மாண்ட மியூசிக் ஸ்டுடியோ கட்டியுள்ளார். மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். தொடர்ந்து மஜ்னு, 12பி, சாமுராய், சாமி, காக்க காக்க, உள்ளம் கேட்குமே, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். தற்போது சிங்கம்-3, ஏஎல்விஜய், சாமி2 படங்களுக்கு இசையமைப்பவர் தற்போது சென்னையில் பிரமாண்ட ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார்.
சென்னை, வளசரவாக்கத்தில், 18 கோடி ரூபாய் செலவில், ஸ்டுடியோ எச் என்ற, பிரம்மாண்ட மியூசிக் ஸ்டுடியோவை கட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ். ஒரே நேரத்தில், 80 பேர் அமர்ந்து இசைக்க முடியும்; 500 பேர் அமரும் வசதி உள்ளது. ஆசியாவிலேயே, முதல், 10 இடங்களில், இந்த ஸ்டுடியோவும் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, ஹங்கேரி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள, இசை வாத்தியங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் தீபாவளி அன்று, ஸ்டுடியோ திறக்கப்பட உள்ளது.