ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர்கள் அரசியலுக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இன்றைக்கு தமிழகத்தை ஆளும் முதல்வர் ஜெயலலிதாவே ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் தான். ஏற்கனவே ராமராஜன், குண்டுகல்யாணம், பொன்னம்பலம், விந்தியா, குயிலி, பாத்திமா பாபு, சிங்கமுத்து, சிஆர் சரஸ்வதி என... பலர் அதிமுக.,வில் இணைந்துள்ள நிலையில், நடிகர் கஞ்சா கருப்பும், நடிகை பசி சத்யாவும் இன்று(செப்.,14-ம் தேதி) அதிமுக.,வில் இணைந்தனர்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சுமார் 20 ஆயிரம் பேர் அதிமுக.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் நடிகர் கஞ்சா கருப்பும், நடிகை பசி சத்யாவும் தங்களை முறைப்படி அதிமுக., வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினருக்கான அட்டையை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து அதிமுக.,வின் வளர்ச்சிக்காக பாடுபடப்போவதாக இருவரும் அறிவித்துள்ளனர்.