‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
திருமணத்திற்கு முன் மஞ்சு வாரியர் நடித்த படங்களை கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக புலப்படும்.. பெரும்பாலான படங்களில் தன்மானம் கொண்ட பெண்ணாக, அதேசமயம் ஒரு வாலிபனின் காதலியாக, கல்லூரி பெண்ணாக, கிராமத்து பெண்ணாக என குறுகிய வட்டத்தில் தான் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி இருப்பார். ஆனால் இப்போது அவர் நடித்து வரும் படங்களில் அவரது கேரக்டர்களை பார்த்தால் விதவிதமாக இருக்கிறது.. லாயர், டாக்டர், டீச்சர், வாலிபால் கோச் என புதுப்புது கேரக்டர்கள் அவரை தேடி வருகின்றன..
அந்தவகையில் லேட்டஸ்டாக அவரை தேடிவந்திருப்பது போஸ்ட்வுமன் கேரக்டர்.. கொச்சியை சேர்ந்த சாயிரா பானு என்கிற மிடில்கிளாஸ் முஸ்லீம் பெண்ணாக இதில் நடிக்கிறார்.. படத்தின் பெயரும் 'C/O சாயிரா பானு' தான்.. முஸ்லீம் பெண் தான் என்றாலும் பாரம்பரிய உடைகள் என இல்லாமல் பணிக்குச்செல்லும் பெண் அணியும் ஆடைகளையே அணிந்து நடிக்கிறாராம். அதுமட்டுமல்ல, டீனேஜ் பையனின் தாயாகவும் நடிக்கிறார். இதில் அவரது மகனாக நடிப்பவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான 'கிஸ்மத்' பட ஹீரோவான ஷேன் நிகம் என்பவர் தான்.