'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். ஏற்கனவே மணம் முடிந்த நடிகர் சைப் அலிகானை காதலித்து மணந்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் கரீனா. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் கர்ப்பமானார். டிசம்பர் மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிசம்பர் இரண்டாம் வாரத்தில் அதாவது, டிச.,8-ம் தேதி கரீனாவின் மாமியாரின் பிறந்த தினமான சர்மிளா தாகூரின் பிறந்தநாள் அன்றோ அல்லது கரீனாவின் தாத்தா ராஜ்கபூரின் பிறந்தநாள் அன்றோ குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குழந்தை பிறக்க இருப்பதால் தற்காலிகமாக நடிப்பதை தவிர்த்துள்ளார் கரீனா. மார்ச் மாதம் முதல் அவர் வீரே தி ஷாதி படத்தில் நடிக்க உள்ளார்.