இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு வம்சம், திருத்தணி, பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம், நீர்ப்பறவை என பல படங்களில் நடித்தார் சுனைனா. இதில் சில படங்களில் ஹோம்லியாக நடித்தபோதும், பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்தில் நீச்சல் உடையிலும் நடித்து பரபரப்பு கூட்டினார். ஆனபோதும், எதிர்பார்த்தபடி சுனைனாவுக்கு முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதோடு அவர் ஸ்ரீகாந்துடன் நடித்த நம்பியார் படமும் கிடப்பில் போடப்பட்டு சமீபத்தில்தான் திரைக்கு வந்தது.
இந்நிலையில், விஜய்யின் தெறி படத்தில் நட்புக்காக நடித்த சுனைனா, தற்போது ஜீவாவுடன் நடித்துள்ள கவலை வேண்டாம் படத்தை எதிர்பார்க்கிறார். ஆனால் இதேபடத்தில் காஜல் அகர்வாலும் நாயகியாக இருப்பதால் சுனைனாவின் கேரக்டர் பெரிதாக இருக்காது என்பதால் அவரது நடிப்பைப்பற்றி பெரிதாக எதிர்பார்ப்பு எழவில்லை. ஆனால் சுனைனாவோ சில டைரக்டர்களை தொடர்பு கொண்டு, கவலை வேண்டாம் படத்தில் தனக்கு அழுத்தமான வேடம் கிடைத்திருப்பதாகவும், இதன்பிறகு தனது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்கும் என்று கூறி வருபவர், புதிய படங்களில் சான்ஸ் கேட்டு தீவிர படவேட்டையிலும் இறங்கியிருக்கிறார்.