போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை பெரும்பாலும் வில்லன்கள்தான் சண்டை காட்சிகளில் சட்டையை கிழித்துக்கொண்டு ஹீரோக்களுடன் மோதுவார்கள். அதேபோல் சமீபகாலமாக சிக்ஸ்பேக் ஹீரோக்களும் அந்த உடல்கட்டை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு சண்டை காட்சி வைத்து அந்த காட்சியில் முதலில் வில்லன்களை சட்டையை கழற்றி எறிய வைத்து விட்டு, பின்னர் தாங்களும் சட்டையை கழற்றி வீசியபடி அவர்களுடன் மோதி வருகிறார்கள்.
இந்நிலையில், பெரும்பாலும் தனது படங்களில் சட்டை இல்லாமல் நடிப்பதை விரும்பாத விஜய், மோகன்ராஜா இயக்கத்தில் நடித்த வேலாயுதம் படத்தில் ஒரு அதிரடியான சண்டை காட்சியில் சட்டை இல்லாமல் நடித்தார். அதேபோல் இப்போது பரதன் இயக்கத்தில் நடித்து வரும் பைரவா படத்திலும் ஒரு சண்டை காட்சியில் சட்டையில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அந்த சண்டை காட்சி ராஜமுந்திரியில் படமாக்கப்பட்டு வருகிறது.