மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
எம்.ஜி.எஸ் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள படம் திருமால் பெருமை. கோபால்ராம் இயக்கி உள்ளார். அவரே முக்கிய கேரக்டரில் நடித்தும் உள்ளார். டெல்லி கணேஷ், தமிழ்மணி, வையாபுரி, பாலாஜி, ஜானகி, சங்கீதா உள்ளபட பலர் நடித்துள்ளனர். ராம் யோகா ஒளிப்பதிவு செய்துள்ளார், பார்த்தசாரி, ராஜ் பாஸ்கர் இசை அமைத்துள்ளனர்.
"இது திருப்பதி ஏழுமலையான் மகிமையை சொல்லும் படம். கடவுள் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதபோது சில நேரம் கடவுளே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வந்து அதை மனிதனுக்கு உணர்த்துவான். அப்படி திருப்பதி பாலாஜி தன் மக்களுக்கு உணர்த்துகிற கதை. படப்பிடிப்பு திருப்பதி, ஊத்துக்கோட்டை மற்றும் சென்னையில் நடந்துள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்லும். படத்துக்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளது. அதோடு கேளிக்கை வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. என்றார் இயக்குனர் கோபால்ராம்.
படத்திற்கு முதலில் பாலாஜி மகிமை என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. படத்திற்கு தூய தமிழில் பெயர்வைத்தால்தான் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் திருமால் பெருமை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருமால் பெருமை நடிகர் திலகம் சிவாஜி நடித்த பக்தி படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.