Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஒப்பம்' தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் கமல்..?

13 செப், 2016 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Kamal-in-oppam-Tamil-remake?

கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக மலையாளத்தில் வெளியான படங்களில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாக்கி இருக்கும் 'ஒப்பம்' படம் முதலிடத்தை பிடித்திருப்பதாக தெரிகிறது. இந்தப்படத்தில் கண்பார்வையற்றவராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மோகன்லால். அதனால் தானோ என்னவோ இந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினியும் ரிலீஸான மறுநாளே அஜித்தும் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை விரும்பி பார்த்துள்ளனர்.


இப்போது மூன்றாவதாக உலக நாயகன் கமலும் இந்தப்படத்தை பார்த்துவிட்டார்.. உடனே பிரியதர்ஷனை அழைத்து பாராட்டியும் தள்ளிவிட்டார்.. குறிப்பாக பார்வையற்றவராக நடித்துள்ள மோகன்லாலின் அற்புதமான நடிப்பு கமலை அசத்திவிட்டது.. இத்தனைக்கும் ராஜபார்வை படத்தில் பார்வையற்றவராக நடித்தவர்தான் கமல். இப்போது இந்தப்படத்தை பார்த்ததும் இதன் தமிழில் ரீமேக்கில் தானே நடிக்க விரும்புவதாக பிரியதர்ஷனிடம் சொன்னார் என்றும் சொல்லப்படுகிறது.


ஏற்கனவே மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' பட ரீமேக்கில் நடித்து வெற்றி கண்ட கமல், இந்தப்படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.. காரணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற நான்கு மொழிகளிலும் ரீமேக் செய்யக்கூடிய அருமையான சைக்கோ த்ரில்லர்தான் இந்த 'ஒப்பம்'.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in