Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நவ.,10-ல் ‛சென்னை 28-2 ரிலீஸ்

13 செப், 2016 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Chennai-28-2-releasing-on-Nov.,-10

2007ம் வருடத்தில் இளம் நடிகர்களை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய படம் சென்னை 28. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகுதான் குறும்படங்கள் மூலம் பட இயக்குனர்களாக அறிமுகமானவர்களுக்கும் வாசல்கள் திறந்தது. தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய அஜித்தின் 50-வது படமான ‛மங்காத்தா மாபெரும் வெற்றிபடமாக அமைந்து வெங்கட்பிரபுவை பெரிய இயக்குநராக்கியது. ஆனால் அதன்பின்னர் அவர் இயக்கிய பிரியாணி, மாசு படங்கள் தோல்வியை தழுவி வெங்கட்பிரபுவின் கேரியரை பதம் பார்த்தது.


இதனால் மீண்டும் தன் கேரீயரை நிலைநிறுத்த, தனக்கு திருப்புமுனை தந்த ‛சென்னை 600028 படத்தின் அடுத்தபாகத்தை, 9 வருடங்களுக்கு பிறகு கையிலெடுத்துள்ளார் வெங்கட்பிரபு. முந்தைய பாகத்தில் நடித்த ஜெய், அரவிந் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், மிர்ச்சி சிவா, விஜயலட்சுமி, நிதின் சத்யா, விஜய் வசந்த் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். கூடுதலாக, மஹத், வைபவ் ஆகியோரும்இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.


இந்நிலையில் ‛சென்னை 28-2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகிற நவம்பர் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இத்தகவலை இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெங்கட்பிரபு அறிவித்தார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in