இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ரிட்டையர்டு ஆன பழைய ஹீரோக்களும் வில்லன்களும் தான் குணச்சித்திர நடிகர்களாக மாறிவந்த நிலையில் அத்திப்பூத்தாற்போல அவ்வப்போது திடீரென அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் தோன்றுவார்கள்.. மலையாள திரையுலகில் 'லெப்ட் ரைட் லெப்ட்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரீஷ் பெராடி. அரசியல் ராஜதந்திரங்களை உள்ளடக்கி கம்யூனிஸ சிந்தனையுடன் உருவான அந்தப்படத்தில் அமைச்சராக மிக அருமையாக வில்லத்தனம் காட்டியிருந்தார் ஹரீஷ் பெராடி. அதன்பின் முன்னணி நடிகர்கள் படங்களில் தவறாது இடம்பெற ஆரம்பித்து விட்டார்.
இவரைப்பற்றி இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது. சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'கிடாரி' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமாகியுள்ளார். அந்தப்படத்தில் நெப்போலியனின் எஜமானாக வந்த அரசியல்வாதி கேரக்டரில் நடித்தாரே அவர்தான் இவர். அடுத்ததாக விஜய்சேதுபதியின் ஆண்டவன் கட்டளை' படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வெளியானதும் அடுத்தடுத்த வாய்ப்புகள் தன்னை தேடிவரும் என நம்புகிறார் ஹரீஷ் பெராடி. மலையாள சினிமாவில் இருந்து வந்து தமிழில் அழுத்தமாக கால் பதித்த வில்லன் நடிகர் லால், மனோஜ் கே.ஜெயன் ஆகியோர் போல இவரும் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.