இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
2014-ல் கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் உளிதவரு கண்டந்தை. கிஷோர், தாரா, அச்சுத்குமார் உள்பட பலர் நடித்த அப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. சண்டமரியா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார்.
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் அவர்தான் வில்லன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லையாம். இதுவரை நடிக்காத ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தில் நெகடீவ் ரோலில் அவரை நடிக்குமாறு கேட்டபோது, படத்துக்குப் படம் வில்லனாக நடித்து எனக்கு போரடித்து விட்டது. அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடிக்கிறேன் என்று கேட்டு வாங்கி நடித்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ்.