நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட் நடிகர்களான ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் தாங்கள் இந்தியில் நடித்த படங்கள் தமிழ்நாட்டில் வெளியாகும்போது இங்கு வந்து அந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், தமிழ்ப்படங்களில் நடிக்கும் சில நடிகர் நடிகைகள் சென்னையில் நடக்கும் தங்கள் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில்கூட கலந்து கொள்வதில்லை. இந்த விசயத்தில் அஜீத், நயன்தாரா இருவரும் முதலிடம் பிடித்து வருகிறார்கள்.
ஆனால் இப்போது அவர்களைப்பார்த்து மேலும் சில நடிகர் நடிகைகளும் ப்ரமோஷன்களை தவிர்க்கத் தொடங்குகிறார்கள். முக்கியமாக தமன்னா சமீபகாலமாக தான் நடித்த படங்களின் ஆடியோ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அவர் எதற்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்க்கிறார் என்று விசாரித்தபோது, தான் நடித்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் எக்ஸ்ட்ரா பேமண்டு கேட்கிறாராம் தமன்னா. அப்படி தர மறுத்ததால் அவரும் ஆடியோ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லையாம்.
இதையடுத்து, தான் நடித்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கே பணம் கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.