ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வெள்ளியன்று ஓணம் பண்டிகை ரிலீஸாக குஞ்சாக்கோ போபன் நடித்த 'கொச்சவ்வா பவுலோ அய்யப்பா கோயில்ஹோ' என்கிற படம் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஓம் சாந்தி ஒசானா, ஒரு வடக்கன் செல்பி, ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் இசையமைத்தவர் தான் ஷான் ரஹ்மான். தற்போது குஞ்சாக்கோ போபன் குறித்து தனது பேஸ்புக்கில் பொறாமையுடன் பதிவிட்டுள்ளார் ஷான் ரஹ்மான்.
“தலசேரி சித்ரவாணி தியேட்டரில் குஞ்சாக்கோ போபன் நடித்த 'அனியத்தி பிறா' படத்துக்காக சிறுவயதில் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.. அப்போதெல்லாம் எங்கள் பள்ளி மாணவிகள் குஞ்சாக்கோ போபனை நேரில் பார்த்தால் பிய்த்து தின்ன தயாராக இருந்தார்கள்.. அவர்களது நோட்டுகளின் அட்டைகளில் எல்லாம் குஞ்சாக்கோ தான்.. எங்கள் பக்கம் பார்வையை திருப்ப விடாமல் செய்த பெருமை முழுதும் குஞ்சாக்கோவுக்குத்தான் சேரும். அவ்வளவு பொறாமைப்பட்டேன் அவர் மேல்.. இன்று அவர் தயாரித்து நடித்துள்ள படத்திற்கு நான் இசையமைத்திருக்கிறேன் என்பதும், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் நினைத்து பார்க்கமுடியாத நிகழ்வுகளாக இருக்கின்றன” என அந்தப்பதிவில் கூறியுள்ளார் ஷான் ரஹ்மான்.