பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் படத்தை இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார். செப்டம்பர் 1ல் திரைக்கு வந்த இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் வசூலிலும் லாபம் ஈட்டி வருகின்றது. மைதிரி மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சமந்தா, நித்யா மேனன், உன்னி முகுந்தன், ரகுமான், சாய்குமார், தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடிதந்த ஐதராபாத்தைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்துவிற்கு ஜனதா கேரேஜ் படத்தை திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். சிந்துவுடன் பயிற்சியாளர் கோபிசந்த்தும், ஜனதா கேரேஜ் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டார். ஐதராபாத் பேட்மிட்டன் அஸோசியஷனின் தலைவர் சாமுண்டேஷ்வர்நாத் மற்றும் பலர் ஜனதா கேரேஜ் சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டனர். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிவி சிந்து, ஜூனியர் என்.டி.ஆர் அருமையாக நடித்திருப்பதாகவும் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்த்ததாகவும் கூறினார். படம் வெற்றி அடைய படக்குழுவினருக்கு சிந்து வாழ்த்துகளும் கூறினார்.