ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் சுஷாந்த் சிங்கும் ஒருவர். தற்போது "எம் எஸ் தோனி" படத்தில் தோனியாக நடித்து உள்ளார். இவரும், டிவி நடிகை அங்கிதாவும் நெருக்கமாக இருந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன் சுஷாந்த் சிங் மற்றும் அங்கிதா லோகாண்டே இடையே பிரிவு எற்பட்டது. சமீபத்தில் அங்கிதா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, இருவரும் பேசிக்கொண்டதாகவும், தங்களது காதலை மீண்டும் புதுப்பித்ததாகவும் ஒரு செய்தி வெளிவந்தது. இதைப்பற்றி சுஷாந்த் சிங்கிடத்தில் ஒரு நிகழ்ச்சியில், நீங்கள் இருவரும் இன்னும் காதலித்து கொண்டு தான் இருகிறார்களா என்று கேட்டபோது அவர் கூறியதாவது...
"அங்கிதாவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் அவருடன் பேசுவது கூட இல்லை. அவர் படத்தில் நடிப்பதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்கிதா படத்திற்கு என் வாழ்த்துகள்" என்றார்.
சுஷாந்த் சிங் , தற்போது நடித்துள்ள "எம் எஸ் தோனி " படம் இந்த மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.