'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
விக்ரம் பிரபு நடித்த இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமானவர் சுரபி. நல்ல அழகும், திறமையும் வாய்ந்த நடிகைதான் ஆனால் தமிழில் அவருக்கு ராசியில்லாத நடிகை என்ற இமேஜ்தான் உள்ளது. இவன் வேற மாதிரிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்திலும், ஜீவா படத்திலுல் சிறிய கேரக்டரில் நடித்தார். ஹீரோயினாக நடித்த புகழ் படமும் பெரிதாக பேசப்படவில்லை.
இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் அடங்காதே படத்தில் சுரபி ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி என்ற புதுமுகம் இயக்குகிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் அண்ணனாக சரத்குமார் நடிக்கிறார்.
இந்தப்ப படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு இரண்டு கெட்-அப்கள். ஒன்று கிராமத்து இளைஞர் வேடம். இன்னொன்று ஒரு வேலையாக வடமாநிலத்துக்கு செல்லும் கெட்அப். அப்படி செல்லும்போது சந்தித்து காதல் கொள்ளும் வடமாநில பெண்ணாகத்தான் சுரபி நடிக்கிறார். சுரபியின் ராசியில்லா நடிகை இமேஜை ஜி.வி.பிரகாஷ் தனது வெற்றி ராசியின் மூலம் மோற்றுவாரா என்பது பட ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்.