இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு காலத்தில் திரைப்பட இசை நிகழ்ச்சிகளை கடுமையாக விமர்சித்தவர் இளையராஜா. "நான் சாப்பிட்டதை திரும்ப வாந்தி எடுப்பது போன்றதுதான் என் பாடலை நானே மேடையில் பாடுவது" என்று கடுமையாக சொன்னவர் இளையராஜா. ஆனால் இப்போது அவரது மனநிலையில், கருத்தில் மாற்றம். "நான்கு சுவர்களுக்குள் பாடியதை மக்கள் திரள் முன் பாடுவது அவர்களுக்கும் தனக்கும் சுகமான அனுபவம்" என்று கருதுகிறார். அதனால் அடிக்கடி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பணயம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். நேற்று முன்தினமும், நேற்றும் கலிபோர்னியாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். முதல் நாள் தெலுங்கிலும் மறுநாள் தமிழிலும் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அடுத்த வாரம் அதாவது வருகிற 17ந் தேதி டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரிலும், 18ந் தேதி ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரிலும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதன்பிறகு 24ந் தேதி நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நியூயார்க்கிலும், 25ந் தேதி வாஷிங்டனிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள கலாலயா நிறுவனம் செய்துள்ளது.