டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1964-ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் நாகேஷ் நாயகனாக நடித்த படம் சர்வர் சுந்தரம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த அந்த படத்த ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படம் நாகேஷ் நாய கனாக நடித்த படங்களில் முக்கிய இடம் பிடித்தது. இந்நிலையில், தற்போது சந்தானமும் சர்வர் சுந்தரம் என்ற டைட்டீலில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள அந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படமும் காமெடி கலந்த கதையில்தான் உருவாகியிருக்கிறது. அதேசமயம், இதுவரை சந்தானம் படங்களின் படப்பிடிப்புகள் இந்தியாவிற்குள்ளேயே நடந்து வந்த நிலையில், இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை ஆஸ்திரேலியாவில் படமாக்கியுள்ளார்களாம். அதையடுத்து தற்போது கோவாவில் ஒரு டூயட் பாடல் படமாகி வருகிறது. இந்த பாடலில் தற்போது நாயகி வைபவி ஷந்திலியாவுடன் இணைந்து ரொமான்டிக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறாராம் சந்தானம்.