தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓணம் பண்டிகை ரிலீஸாக கடந்த வெள்ளியன்று மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படம் வெளியானது.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் கண்பார்வை தெரியாதவராக நடித்திருப்பது வேறு ஆவலை தூண்டியது. படமும் அதற்கேற்ற வகையில் ரசிகர்களை ஏமாற்றாமல் விறுவிறுப்பான கமர்ஷியல் படமாக இருப்பதாக ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இந்தப்படம் வெளியாகும் முதல் நாளே அதை பார்த்துவிடவேண்டும் என சூப்பர்ஸ்டார் ரஜினி ஆசைப்பட கடந்த வியாழனன்று அவரது வீட்டிலேயே இந்தப்படத்தை திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்தார் பிரியதர்ஷன்.. இன்னொரு ஆச்சர்யமான விஷயமாக இந்தப்படத்தை அஜித்தும் பார்க்க விரும்பியதுதான். அதனால் நேற்று சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் அஜீத்துக்காக சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படத்தை அஜித் மிகவும் ரசித்து பார்த்ததாக தியேட்டர் ஊழியர்கள் பேசிக்கொண்டார்களாம்.