தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் வளையல். பாரதிராஜாவின் உதவியாளர் ஏ.குருசேகரா இயக்குகிறார், சக்தி சிவன், பாவ்யாஸ்ரீ நடிக்கிறார்கள். ஜி.சிவா ஒளிப்பதிவு செய்கிறார். டி.எஸ்.முரளி சுப்பிரமணி இசை அமைக்கிறார். இந்த படத்தை தம்பிக்காக அண்ணன் தயாரிக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளரும், இயக்குனரின் அண்ணனுமான கலியப்பன் கூறியதாவது:
நாங்கள் அண்ணன் தம்பி 6 பேர். ஒருவர் இறந்து விட்டார் சிலர் கூலி வேலை செய்கிறார்கள், சிலர் விவசாயம் செய்கிறார்கள். கடைசி தம்பி குருசேகரா மட்டும் சினிமா சினிமா என்று அலைந்தான். திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. நாங்கள் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நான் சென்னையில் டிரைவராக இருந்தேன். பிறகு தானே சொந்தமாக கார் வாங்கினேன். இன்றைக்கு பெரிய டிராவல்ஸ் நடத்துகிறேன். ஆனால் தம்பி சினிமாவுக்காக தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறான்.