அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலாபால் தோழியாகவும், தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஹன்சிகா தோழியாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது வீரா படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். இதில் அவர் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். கருணா, தம்பிராமய்யா, ராதாரவி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை ராஜாராம் இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
"சொந்த ஊர் கேரளா, ஆனால் பிறந்து வளர்ந்து தமிழ் நாட்டில் தமிழ் சரளமாக பேசுவேன். முதில் மாடலிங் துறையில்தான் இருந்தேன். சில விளம்பர படங்களிலும் நடித்தேன். எனது தோழிகள் பாக்கெட் மணிக்காக சினிமாவில் ஹீரோயின் தோழியாக நடிக்கச் செல்வார்கள். நானும் அப்படித்தான் சும்மா ஜாலிக்காக நடிக்க சென்றேன். ஆனால் நான் படத்தில் தனித்து தெரிவதை பார்த்து கன்னடம் மற்றும் மலையாள படங்களில் ஹீரோயின் வாய்ப்பு வந்தது. இப்போது தமிழிலும் ஹீரோயின் ஆகிவிட்டேன்" என்கிறார் ஐஸ்வர்யா மேனன்.