வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் பிறந்த ஊர் மக்கள் தொடங்கி ஜனாதிபதி வரை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இதுதவிர ஏராளமான பரிசுத்தொகைகளும் குவிந்து வருகிறது.
திரையுலக நட்சத்திரங்களான நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சூர்யா, சிவகார்த்திகேயன், சந்தானம், டைரக்டர் மோகன் ராஜா, இசையமைப்பாளர் தமன், பாடகி சின்மயி உள்ளிட்டோர் வாழ்த்து கூறி இருந்தனர். இந்நிலையில் இன்று நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர், பாராலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் வருண் பாதி உங்களுக்க வாழ்த்துக்கள் பல என குறிப்பிட்டுள்ளார்.