'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்ன ஜமீன், கட்டபொம்மன், வியட்நாம் காலனி, கர்ணா, வானத்தைப் போல என பல படங்களில் நாயகியாக நடித்தவர் வினிதா. அந்த வகையில், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, சரத்குமார், முரளி என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் வினிதா. பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தபோது சில படங்களில் கேரக்டர் நடிகையாகவும் வலம் வந்தார். அதோடு தனக்குப்பிறகு தனது தம்பியை சினிமாவில் ஆளாக்கி விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால் அது ஒர்க்அவுட் ஆகவில்லை.
இருப்பினும், சிங்கப்பூர் சிட்டிசனான வினிதா அடிக்கடி அங்கே சென்று விட்ட போதும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு மாதம் ஒரு முறை விசிட் அடித்து சினிமா நண்பர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டி ருக்கிறார். அந்த முயற்சி காரணமாக தற்போது, நேற்று போல் இன்று இல்லை -என்ற படத்தில் ஒரு பக்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த பாடலில் நடன மாடுவதற்கு முன்பு சில வாரங்கள் அம்மனுக்கு விரதமிருந்து பய பக்தியுடன் நடனமாடினாராம் வினிதா.