தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் படம் சென்னை 2 சிங்கப்பூர். இந்த படத்தின் பாடல்களை தனித்துவமான முறையில் வெளியிட முடிவு செய்த ஜிப்ரான் மற்றும் படக் குழுவினர், சாலை வழி பயணத்தில் சிங்கப்பூரை நோக்கி பயணப்பட்டனர்.
சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் முதல் பாடலை சென்னையிலும், இரண்டாவது பாடலை பூட்டானிலும், மூன்றாவது பாடலை மியான்மாரிலும் வெளியிட்டதாக சொன்னார்கள். ஏனைய பாடல்களை மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
சென்னை 2 சிங்கப்பூர் படக்குழுவினர் பயணம் செய்த கார் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தாய்லாந்து நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜிப்ரான் உள்ளிட்டவர்கள் தாய்லாந்து மற்றும் மியன்மாரின் எல்லை பகுதியில் இருக்கின்றனர். விரைவில் காரை மீட்டுக்கொண்டு பயணத்தைத் தொடர உள்ளனர்.
இந்நிலையில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத ஏனைய பாடல்கள் இணையத்தளங்களில் கசிந்திருக்கிறது. எனவே அதிர்ச்சியடைந்த ஜிப்ரான் மற்றும் படக்குழுவினர் பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிடலாமா என்று யோசித்து வருகின்றனர்.