'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
செப்டம்பர் 1-ந்தேதி திரைக்கு வந்த தெலுங்கு படம் ஜனதா கேரேஜ். ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடித்த இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா, நித்யாமேனன், தேவயானி, சித்தாரா, ரகுமான் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் காஜல்அகர்வால் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்து ஜூனியர் என்டிஆரின் மார்க்கெட்டில் புதிய பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜனதா கேரேஜ் படம் தமிழில் விஜய் நடிப்பில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யு டன் மோகன்லால் நடித்த ஜில்லா படம் வெற்றி பெற்றதால், ஜனதா கேரேஜ் தெலுங்கு பதிப்பில் நடித்த மோகன்லாலே தமிழிலும் நடிப்பார் என்று தெரிகிறது. ஆனால் விஜய், பைரவா படத்தில் நடித்து முடித்ததும் இந்த ரீமேக் படத்தில் நடிக்கிறாரா? இல்லை அட்லி இயக்கும் படத்தில் நடித்த பிறகு நடிக்கப்போகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.