ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை எதிர்த்து இரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தார். உலகில் நீண்ட நாள் உண்ணாவிரதம் இருந்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. தற்போது தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடப்போகிறார். உண்ணாவிரதத்தால் செய்ய முடியாததை ஆட்சி அதிகாரத்தால் செய்ய முடியுமா என்று முயற்சிக்கப்போகிறார். இரோம் ஷர்மிளா வாழ்க்கை பற்றி நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது. தற்போது அவரது வாழ்க்கையை சினிமாவாகவும் எடுக்க இருக்கிறார்கள். இதற்கு இரோம் ஷர்மிளா சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியில் தயாராகும் இந்தப் படத்தில் இரோம் ஷர்மிளாவாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இம்பால் என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை அலிகார் படத்தை இயக்கிய ஹன்சல் மேத்தா இயக்குகிறார். படத்தில் நடிப்பதற்காக டாப்ஸி, இரோம் ஷர்மிளாவோடு சில காலம் தங்கியிருந்து அவரது மேனரிசங்களை கற்றுக்கொள்ள இருக்கிறார். இதற்கான முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கி உள்ளது.