‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் காமெடி ஜோடி அமைவது மிகவும் அபூர்வம். அந்தக் காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன்-டி.ஏ.மதுரம் ஜோடி 100 படங்களுக்கு மேல் நடித்தார்கள். பின்னாளில் நாகேஷ்-மனோரமா ஜோடி புகழ்பெற்றது. அதன்பின்னர் வடிவேலு-கோவை சரளா ஜோடி புகழ்பெற்றது.
இந்த வரிசையில தங்கவேலு-எம்.சரோஜா ஜோடி 50 படங்களில் ஜோடியாக நடித்து சிரிக்க வைத்தார்கள். என்.எஸ்.கே-மதுரம் ஜோடிக்கு அடுத்து அதிக படங்களில் நடித்தது தங்கவேலு-சரோஜா ஜோடிதான். 50 படங்களில் நடித்து முடித்த பிறகு தங்கவேலுவும், எம்.சரோஜாவும் திருமணம் செய்து கொண்டார்கள். தங்கவேலுவுக்கு ஏற்கெனவே ராஜாமணி அம்மாள் என்ற மனைவி இருந்தார். அது தெரிந்தே தான் சரோஜா தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டார். ராஜமணி அம்மாளுக்கு இரு மகளும், எம்.சரோஜாவுக்கு ஒரு மகளும் பிறந்தனர். 1994ம் ஆண்டு தனது 77வது வயதில் தங்கவேலு மறைந்தார்.