புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருக்கும் ஹீரோக்களில், அமீர் கானும் ஒருவர் . இவர் தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் "டங்கல் " படத்தில் மல்யுத்த வீரராக நடித்து வருகிறார். இதையடுத்து ‛தக் ஆப் இந்துஸ்தான்' எனும் படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்க உள்ளார்.
இதற்கிடையே அமீர்கான், தன்னுடைய முன்னாள் மேலாளரான அத்வைத் சந்தன் இயக்கும் படத்தில், ஒரு முக்கியமான தோற்றத்தில் நடித்து இருக்கிறார். இது அமீர்கானின் சொந்த படமாகும். இதற்கான ஷூட்டிங் துவங்கி விட்டது.இந்தப்படத்திற்காக ‛டங்கல் இயக்குநர் நிதேஷிடம் 8 நாட்கள் அனுமதி வாங்கி தன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வருகிறார் அமீர். ‛சீக்ரெட் சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இப்படம், அம்மா - மகன் இடையே இருக்கும் பாசத்தை பற்றி பேசப்போகிறது.
‛சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தில் அமீர் கானின், பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு. இதில் அமீர் கான் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். அமீர்கான் இதுவரை இவ்வாறான வித்தியாசமான வேடத்தில் நடித்தது இல்லை. அநேகமாக அமீர் கான் இசையமைப்பாளராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது அமீர் கான் நடித்து வரும் "டங்கல்" படம் இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்து உள்ளது.