வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஜி.வி.பிரகாஷ்குமார் கடைசியாய் நடித்த படம் ‛எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. டார்லிங் படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய சாம் ஆண்டன் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. எனவே, தற்போது நடித்து வரும் புரூஸ் லீ, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவற்றில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை மிகவும் நம்பியிருக்கிறார். இந்தப் படம் தீபாவளியன்று ரிலீஸாக உள்ளது. புரூஸ் லீ படமும் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், 'கடவுள் இருக்கான் குமாரு' படம் வெளியான சில வாரங்களிலேயே அந்தப் படமும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், தற்போது தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்குமார். 'அடங்காதே' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. சண்முகம் முத்துசாமி என்ற புதிய இயக்குநர் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தில் ஜி.வி.யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் சரத்குமாரும் நடிக்கிறார். அடங்காதே படத்தில் சீனியர் நடிகரான சரத்குமார் உடன் இணைந்து நடிப்பதைப்போலவே பாண்டிராஜ் இயக்கும் படத்தில் ராஜ்கிரண் உடன் இணைந்து நடிக்கிறார்.