தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான் ஈ, வெப்பம் போன்ற தமிழ் படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நானி தற்போது மஜ்னு, நேனு லோக்கல் போன்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இதில் இயக்குனர் விரின்சி வர்மா இயக்கத்தில் நானி மலையாள நடிகை அனு இமானுவேலுடன் இணைந்து நடிக்கும் மஜ்னு திரைப்படம் செப்டம்பர் 16ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மஜ்னு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 23க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் விரின்சி வர்மா கூறியுள்ளார். விரின்சி வர்மா விடுத்துள்ள அறிவிப்பில் மஜ்னு படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு படக்குழுவினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ல் மஜ்னு திரைக்கு வரும் இவ்வாறு விரின்சி வர்மா குறிப்பிட்டுள்ளார். ப்ரியா ஸ்ரீ, வெண்ணிலா கிஷோர், சத்ய கிருஷ்ணா, பூஷனி கிருஷ்ண முரளி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.