'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன்கள் நாகசைதன்யா மற்றும் அகிலின் திருமணம் தான் தற்போது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக். நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லக்ஷ்மியின் மகன் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலிக்கின்றார். நாகார்ஜூனா மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை அமலாவின் மகன் அகில் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரேயா பூபல் என்பவரை காதலிக்கின்றார்.
இது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இவர்களது திருமணம் ஒரு நல்ல நாளில் அறிவிக்கப்படும் என நாகார்ஜூனா சில தினங்களுக்கு முன்னாள் அறிவித்தார். இந்நிலையில் நாகார்ஜூனா, அகில் இருவரின் திருமண நிச்சயதார்த்தங்களும் டிசம்பர் 9 ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் நாகசைதன்யா - சமந்தாவின் திருமணம் டிசம்பர் 22 ஆம் தேதியும், அகில் - ஸ்ரேயா திருமணம் அடுத்த வருடமும் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.