பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜீவா, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் கவலை வேண்டாம். யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டீகே இயக்குகிறார். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். படம் வருகிற அக்டோபர் 7ந் தேதி வெளிவருகிறது. இதில் சுனைனா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
மூணாரில் ரெஸ்ட்டாரெண்ட் நடத்தும் ஜீவாவை ஒரு தலையாக காதலிப்பார் சுனைனா. மூணாருக்கு விடுமுறையில் வரும் காஜல் அவர்வாலை ஜீவா காதலிப்பார். இதனால் காஜலை ஊரைவிட்டு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவாராம் சுனைனா. காஜலும், சுனைனாவும் நேடியாக மோதிக்கொள்ளும் காட்சிகள் படத்தில் நிறைய இருக்கிறதாம்.
இதுபற்றி சுனைனா கூறியிருப்பதாவது: கவலை வேண்டாம் படத்தில் ஜீவா சாருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் டீகே என்னிடம் கவலை வேண்டாம் படத்தின் கதையை கூறும் போதே, இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாக வேண்டும் என நான் முடிவு செய்துவிட்டேன். ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் சாதுவான பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரமானது நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்கிறார் சுனைனா.