ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான அஜய் தேவ்கன், தற்போது இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் சிவாய். இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தில், தற்போது உலகப்புகழ் பெற்ற பிரபல பிரிட்டிஷ் இசைக்குழுவான வேம்ப்ஸ் இணைந்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்தியா வந்துள்ள வேம்ப்ஸ் குழுவை, அஜய் சந்தித்து ஒரு பாடல் பாடும்படி கேட்க அவர்களும் சம்மதம் சொல்லியிருக்கிறார்கள்.
இதைப்பற்றி அஜய் கூறியதாவது..."சர்வதேச இசைக்குழுவுடன் இணைவது இதுதான் முதல்முறை. அந்த வாய்ப்பு சிவாய் மூலம் நிறைவேறியிருக்கிறது. வேம்ப்ஸ் பற்றி என் மகள் நிசா தான் கூறினார். வேம்ப்ஸ் குழுவில் பிராட்லி சிம்சன், ஜேம்ஸ், கானர் பால் மற்றும் ட்ரிஸ்டன் எவன்ஸ் போன்ற திறமையான பாடகர்கள் உள்ளனர். இவர்களின் இசையில் என் படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது" என்றார்.