ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகை காவ்யா மாதவன் அழகும் நடிப்பும் ஒருங்கே அமையப்பெற்றவர்.. குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் நுழைந்து பின்னாளில் கதாநாயகியாக மாறி வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் காவ்யா மாதவனுக்கும் ஒரு இடம் உண்டு. பத்து வருடங்களுக்கு முன் முன்னணி நடிகையாக வலம் வந்த காவ்யா மாதவன், பீக்கில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார்.. ஆனால் மணவாழ்க்கை அவர் எதிர்பார்த்தபடி அமையாமல் போகவே, கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் மீண்டும் திரையுலகில் நடிக்க வந்தார்..
ஆனால் திருமணத்துக்கு முன்பு வந்தது போல வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லை.. அவரை பற்றி, அவரது நடிப்பு ஆர்வம் பற்றி தெரிந்த இயக்குனர்களும், நடிகர்களும் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தார்கள்.. ஆனால் புதிய தலைமுறை இயக்குனர்கள் காவ்யா மாதவனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.. ஒருவேளை சீனியர் நடிகை என நினைத்து ஒதுக்கிவிட்டார்களோ என்னவோ..? சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி வருத்ததுடன் குறிப்பிட்ட காவ்யா மாதவன், “எனக்கு இன்றைய நடிகைகளைப்போல பாப் கட்டிங் செய்த தலையும் அல்லது சுருள்முடியும் நுனி நாக்கு ஆங்கிலமும் இல்லை.. அதனால் தான் புதிய தலைமுறை இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள் போலும்” என்று கூறியுள்ளார்.