Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பைரவா, ரெமோ படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்குமா?

08 செப், 2016 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Did-Bhairava---Remo-will-get-tax-free

தாணுவின் தயாரிப்பில் அட்லீ இயக்கிய 'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அவரது 60 -ஆவது படத்தை பழம்பெரும் படநிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. கில்லி உட்பட தரணி இயக்கிய பல படங்களின் வசனகர்த்தாவும், விஜய்யை வைத்து ஏற்கனவே 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கியவருமான பரதன் விஜய்யின் 60 ஆவது படத்தை இயக்கி வருகிறார்.


பெயர் சூட்டப்படாமலே படப்பிடிப்பைத் தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்றதால் 75 சதவிகித படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டது. ஏறக்குறைய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்திற்கு 'எங்க வீட்டு பிள்ளை', 'உங்க வீட்டு பிள்ளை' என்று தலைப்பு வைக்க இருப்பதாக பலவகையான யூகங்கள் அடிபட்டன.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன் யாருமே யூகிக்காத 'பைரவா' என்ற தலைப்பை அறிவித்தனர். விஜய் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியானதும் ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு பரபரப்பானது. அதனால் விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தனர். வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் பைரவா தலைப்பை வைத்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வந்தனர்.


ரசிகர்களின் ஆக்ஷன்... ரியாக்ஷன் இப்படி இருக்க, படத்துறையில் நடப்பதோ வேறு. பைரவா என்ற பெயர் தமிழ்ச் சொல் இல்லை, இது வடமொழிச் சொல். எனவே பைரவா படத்துக்கு வரிவிலக்குக் கிடைக்காது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். விஜய் தரப்போ, ரெமோ தமிழ் வார்த்தையா? அந்தப் படத்துக்கு வரிவிலக்குக் கொடுத்தால் பைரவாவுக்கும் வரிவிலக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in