‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாட்ஷா, நானாகு பிரேமதோ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பின்னர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஜனதா கேரேஜ் ரூ 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மைதிரி மூவீஸ் தயாரித்த ஜனதா கேரேஜ் செப்டம்பர் 1ல் திரைக்கு வந்தது. இத்திரைப்படம் வெளிவந்து முதல் 7 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது. தெலுங்கு திரைப்படங்களில் குறைந்த நாட்களில் ரூ 100 கோடியை எட்டிய படங்களின் பட்டியலில் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. தற்போது ஜனதா கேரேஜ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி, விசாகப்படிணம் போன்ற பகுதிகளில் பாகுபலின் வசூலை ஜனதா கேரேஜ் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த ஜனதா கேரேஜ் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா நித்யா மேனன் என இரு நாயகிகள் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் ஒரு இப்படத்தில் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.