தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமந்தா ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகம்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் வெளிவந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவான ஜனதா கேரேஜ் படத்தில் சமந்தாவுடன் நித்யா மேனனும் நாயகியாக நடித்திருந்தார். இதில் நித்யா மேனனுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது சமந்தாவிற்க கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடிய காஜல் அகர்வால் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பக்கா லோகல் என தொடங்கும் அப்பாடல் ஹிட் அடித்தும் ஜனதா கேரேஜ் படக்குழு காஜல் அகர்வாலை புகழ்ந்து தள்ளிகின்றனராம். இது சமந்தாவிற்கு கூடுதல் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆருடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்த பிருந்தாவனம், ராமைய்யா ஒஸ்தாவைய்யா, ரபசா உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்த பட்டியலில் தற்போது ஜனதா கேரேஜ் படமும் சேர்ந்து விட்டது.