நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், தனது இரண்டாவது படமாக விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இருமுகன் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். அதில் ஒரு ரோல் பெண்மை கலந்த கதாபாத்திரம்.
விக்ரம் ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். கூடவே நாசர், தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்தில் நயன்தாராவும், நித்யா மேனனும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். கூடவே கூடுதல் கிளாமரையும் அள்ளித் தெளித்திருக்கிறார். விக்ரமே படத்தின் வில்லனாக நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம். இருமுகன் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இப்படத்தை வாங்கி வெளியிடும் ஆராஸ் சினிமாஸ் பெருமையாக கூறியுள்ளது.
இருமுகன் இன்று சுமார் 450 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. படத்தின் ரிசல்ட் என்னவென்று இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். தற்போதைய தகவல்படி படம் பைசா வசூல், த்ரில்லர், அருமை என்று டுவிட்டரில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.