இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பெருமாள் பெருமையை பறைசாற்றும் ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தில் நாகார்ஜூனா முதன்மை வேடமேற்று நடித்து வருகின்றார். இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கத்தில் நாகார்ஜூனா இப்படத்தில் ஹாத்தி ராம் பாபா எனும் பெருமாள் பக்தர் வேடத்தில் நடிக்கின்றார். இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த சொக்கடே சின்னி நயன திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் நாகார்ஜூனா நடித்த பங்கராஜூ கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நாகார்ஜூனா நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. இதனை நாகார்ஜூனா தற்போது உறுதி செய்துள்ளார். 2017 ஜனவரியில் சொக்கடே சின்னி நயன படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஏற்பாடுகள் துவங்கப்படும் என நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். சொக்கடே சின்னி நயன படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை நாகார்ஜூனா தயாரிக்கின்றார்