தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா என ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரவி தேஜா நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பெங்கால் டைகர். இத்திரைப்படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆனபோதிலும் இதுவரை அடுத்த படத்தை இன்னும் அவர் அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சர்தார் படத்தின் இயக்குனர் பாபி இயக்கும் படத்தில் நடிக்க ரவி தேஜா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்தது. தற்போது இயக்குனர் விக்ரம் ஸ்ரீகொண்டா இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளிவரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹா தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படத்திற்கு கதையாசிரியர் வக்கந்தம் வம்சி திரைக்கதை அமைக்கின்றார். இப்படத்துடன் இயக்குனர் பாபி இயக்கும் படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க ரவி தேஜா திட்டமிட்டுள்ளாராம்.