தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தவர் லட்சுமிமேனன். அதன்பிறகு சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, வேதாளம் என பல படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்த எல்லா படங்களுமே ஹிட்தான். அதனால் ஹிட் நடிகை என்கிற முத்திரையுடன் இப்போதுவரை கோலிவுட்டில் நடித்துக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன். அதோடு, கிராமத்து நடிகை என்கிற இமேஜில் இருந்தும் விலகி வேதாளம், மிருதன் போன்ற படங்களிலும் நடித் தார். அந்த படங்களும் வெற்றி பெற்றதால் இப்போது நகரம், கிராமம் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும பொருத்தமான நடிகையாகி விட்டார் லட்சுமிமேனன்.
மேலும், வேதாளம் படத்திற்கு பிறகு அவர் மீதான பரபரப்பு குறைந்தபோதும், தற்போது விஜயசேதுபதியுடன் நடித்துள்ள றெக்க படம் மறுபடியும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்று எதிர்பார்க்கும் லட்சமிமேனன், அதற்கடுத்து ஜீவாவுடன் ஜெமினிகணேசன் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில், விக்ரமை பிரபுவை வைத்து கும்கி-2 படத்தை பிரபுசாலமன் இயக்கப்போகிற செய்திகள் வெளியானதை அடுத்து அந்தபடத்தில் லட்சுமிமேனன் இருக்கிறாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் அதுகுறித்து அவரைக்கேட்டால், கும்கி படம் எனக்கு தமிழில் நல்ல தொரு என்ட்ரியாக அமைந்தது. அந்த வாய்ப்பைக்கொடுத்த பிரபுசாலமனை மறக்க முடியாது. இப்போது கும்கி-2 படத்தை அவர் இயக்கப்போவதாக கேள்விப்பட்டேன். ஆனால் அந்த படம் குறித்து என்னிடம் இதுவரை பேசவில்லை. இருப்பினும் அந்த படத்திலும் வாய்ப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன் என்கிறார் லட்சுமிமேனன்.