சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பெங்களூரை சேர்ந்த ரோஷிணி தினகர் என்கிற இன்னொரு பெண் இயக்குனர் இயக்கும் மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ். ஏற்கனவே அஞ்சலி மேனன், ப்ரியா என பெண் இயக்குனர்களின் படங்களில் நடித்தவர்தான்.. அவரை பொறுத்தவரை கதை பிடித்திருந்தால் போதும், படத்தை இயக்குவது ஆணா, பெண்ணா என்பதெல்லாம் பார்க்கமாட்டார் ஆச்சர்யமான விஷயமாக இந்தப்படம் முழுக்க முழுக்க நார்வே நாட்டில் படமாக்கப்பட இருக்கிறது. இசை சம்பந்தமான படமாக ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த படமாக இது உருவாக இருக்கிறதாம்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமண்யம்.. இந்தப்படத்தின் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்கும் நட்டி, மலையாள படங்களின் தீவிர ரசிகராம். இதற்குமுன் விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நடத்தி, அடுத்ததாக சில படங்களில் நடயைக் போய்விட்டார்.. இந்தப்படத்தின் இயக்குனர் ரோஷிணி தினகர் சொன்ன காதல் கதை இதுவரை தான் கேள்விப்படாத ஒன்று என்பதால் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உடனே ஒகே சொல்லிவிட்டாராம்.