'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மராட்டியில் படமாக உருவாக இருக்கிறது. இதில் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் அது எந்தமாதிரி ரோல் என்று அப்பட இயக்குநரான ரவி ஜாதவ் தெரிவித்துள்ளார்.
இதுப்பற்றி ரவி ஜாதவ் கூறியிருப்பதாவது... ‛‛சத்ரபதி சிவாஜி படத்தில் சல்மானுக்காக ஒரு முக்கியமான ரோலை உருவாக்கி வருகிறோம். தற்போதைய சூழலில் சல்மான்கான் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார், அவருடன் பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் சல்மான் இந்தப்படத்தில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார். தற்போது படத்திற்கான கதை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இப்போதைக்கு நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். படத்தில் சல்மான் கானுக்கான வேடம் கண்டிப்பாக சிறியதாக இருக்காது'' என்றார்.
சத்ரபதி சிவாஜி படம் இந்தாண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதில் ரித்தேஷ் தேஷ்முக் ஹீரோவாக நடிக்க உள்ளார்.