ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்களில் நீரஜ் பாண்டேவும் ஒருவர். இவர் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான வெற்றி படம் ருஸ்டம். இதை தெடர்ந்து இயக்குநர் நீரஜ்-அக்ஷ்ய் மீண்டும் இணைய இருக்கிறார்கள். அந்தப்படத்திற்கு கிராக் என்ற பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கிராக் படத்தை பற்றி கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர் நீரஜ்..." இதுவரை கிராக் படம் பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அடுத்தாண்டு துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி மார்ச் மாத்திற்குள் முடிக்க உள்ளனர். எனக்கும், அக்ஷய்க்கும் நல்ல நட்பு உள்ளது. நாங்கள் இணைந்து பணியாற்ற போவது உறுதி" என்று கூறினார்.
‛கிராக்' படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.