'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
விவசாயத்தை வலியுறுத்தி தயாராகியுள்ள படம் அறுவடை. கண்ணாத்தாள், திருநெல்வேலி, தாயே புவனேஸ்வரி, அருவா வேலு, பன்னாரி அம்மன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா உதவியாளர் லாரன்ஸ் இயக்கி உள்ளார். இயக்குனரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான வைகா நாயகியாக நடித்துள்ளார். எழில் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரவி ஆனந்த் இசை அமைத்துள்ளார்.
"ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்போது வரத் தொடங்கியிருக்கிறது. இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கதை. அதனால் மலையாள நடிகையான வைகாவை ஆடிசன் வைத்து தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். தண்ணீர் தண்ணீர் படம் போன்று இதுவும் தண்ணீர் பிரச்சினை பேசுகிற படம். தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறுகிறது. அந்த நிலத்தை நம்பியுள்ள விவசாயிகளின் நிலை என்ன என்பதை பற்றியும் படம் பேசுகிறது. தண்ணீர் தண்ணீர் படத்தில் சரிதா கேரக்டர் போன்று இதில் வைகா கேரக்டர் இருக்கும். திண்டுக்கல், செம்பட்டி, பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் லாரன்ஸ்.