ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நாயகனாக நடித்த படம் அட்டகத்தி. இந்த படத்தில் அறிமுகமானவர் கன்னட நடிகை நந்திதா. முதல் படமே வெற்றியாக அமைந்ததால் அதன்பிறகு முழுநேர தமிழ் நடிகையான நந்திதா கோடம்பாக்கத்திலேயே தங்கி விட்டார். முன்னணி நடிகை என்கிற அங்கீகாரத்தை பெற முடியவில்லை என்றாலும் பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகை என்பதால் இப்போதும் கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.
அதேசமயம், கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தோல்வியை கொடுத்ததால் மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கிறார் நந்திதா. இருப்பினும் தனது முதல் படநாயகனாக அட்டகத்தி தினேசுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள உள்குத்து படத்தை அவர் பெரிதாக எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் துணி கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ள நந்திதா, வியாபாரம் செய்யும் காட்சிகள், தினேசுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் என இரண்டிலுமே இதுவரையில்லாத அளவுக்கு நடிப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறாராம். அந்த வகையில், டைரக்டர் கார்த்திக் ராஜூ, எத்தனை டேக் நடிக்க சொன்னாலும் முகம் சுழிக்காமல் நடித்தாராம். சில காட்சிகளை 35 டேக்குகள் வரை சளைக்காமல் நடித்தாக சொல்லும் நந்திதா, காதல் காட்சிகளில் இதுவரை எந்த படத்திலும் நான் இத்தனை டேக்குகளில் நடித்ததில்லை என்கிறார்.