ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'அகிரா' படம் கடந்த இரண்டாம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்து ரசிகர்கள் ஒரு பக்கம் பாராட்டிக் கொண்டிருக்க வட இந்திய மீடியாக்கள் படத்தைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டைப் பொறுத்தவரையில் தென்னிந்தியாவில் இருந்து வரும் ஒளிப்பதிவாளர்களை மட்டுமே கம்பளம் விரித்து வரவேற்பார்கள். மற்றபடி இங்கிருந்து இயக்குனர்களோ, ஹீரோக்களோ வந்தால் அவர்களை எவ்வளவு சீக்கிரம் மூட்டை கட்டி அனுப்ப முடியுமோ அதை செய்ய ஆரம்பிப்பார்கள். அதற்கு வட இந்திய மீடியாக்களும் துணை நிற்கும்.
அப்படி ஒரு விஷயம் தற்போது 'அகிரா' படத்திற்கு நடந்து வருவதாகத் தெரிகிறது. தமிழில் வெளிவந்து மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'மௌனகுரு' படத்தைத்தான் ஹிந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவருமே படம் ஹிந்தித் திரையுலகத்தில் இதுவரை வராத ஒரு படமாக இருக்கிறது எனப் பாராட்டி வருகிறார்கள். ஆனால், சில வட இந்திய மீடியாக்கள் படத்தைப் பற்றிய தவறான வசூல் தகவலைப் பரப்பி வருகிறார்களாம்.
சமீபத்தில் அஜய் தேவகன் படத்தை சமூக வலைத்தள விமர்சகர் ஒருவர் மட்டமாக விமர்சிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தற்போது 'அகிரா' படத்திற்கு நடந்து வரும் சம்பவங்களும் திட்டமிட்ட ஒன்றாகவே தெரிகிறது.
தமிழ்த் திரையுலகிலும் சில சமூக வலைத்தள விமர்சகர்கள் பணம் பெற்றுக் கொண்டு மற்ற படங்களை தவறாக விமர்சிப்பதும், தங்களுக்குப் பணம் தரும் படங்களைப் பாராட்டுவதும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.