நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
நடிகர் அமீர்கான், யாஷ்ராஜின் அடுத்த படமான துங் படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இப்படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய அமிதாப் பச்சன், அமீர்கான், யாஷ்ராஜ் மற்றும் டைரக்டர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் பெருமையாகவும், சிறப்பாகவும் கருதுகிறேன். அந்த நேரத்திற்காக மிக ஆர்வமாக காத்திருக்கிறேன். இப்போது அப்படம் தெரியாததால் அதிகமாக பேசமுடியாது. அதற்கான அனுமதியும் எனக்கு கிடையாது. இப்படம் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும் என்றார். அமிதாப் பச்சன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள பிங்க் படம் செப்டம்பர் 16ம் தேதி ரிலீசாக உள்ளது.