சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
டோலிவுட்டின் யங் டைகர் என ரசிகர்கள் கொண்டாடும் ஜூனியர் என்.டி.ஆர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் மட்டும் இப்படம் 30 கோடி வரை வசூல் செய்துள்ளது. இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் மைத்திரி மூவீஸ் நிறுவனம் தயாரித்த ஜனதா கேரேஜ் திரைப்படத்தின் நிசாம் பகுதி விநியோக உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ வாங்கியிருந்தார்.
நிசாம் பகுதியில் வெளிவந்த முதல் நாளில் ஜனதா கேரேஜ் திரைப்படம் ரூ 5.55 கோடி வசூல் செய்தது. இந்த மகிழ்ச்சியை பார்ட்டி வைத்து தில் ராஜூ கொண்டாடியுள்ளார். நேற்று நள்ளிரவில் நடைபெற்ற இந்த பார்ட்டியில் ஜூனியர் என்.டி.ஆர், சிவி மோகன், ரவி சங்கர், நவீன் மற்றும் ஜனதா கேரேஜ் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் என்.டி.ஆரும் ஜனதா கேரேஜ் படக்குழுவினருக்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்து வருகின்றாராம்.