'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராம் சரணுடன் துருவா படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத்தி சிங் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத்தி சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.
நாகார்ஜூனா நடிப்பில் சொக்கடே சின்னி நயன என ஹிட் படம் கொடுத்த இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா அடுத்து இயக்கவிருக்கும் படத்தை நாகார்ஜூனாவே தனது அண்ணப்பூர்னா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். மேலும் அப்படத்தில் நாகார்ஜூனாவின் மகனும் நடிகருமான நாகசைத்யா நாயகனாக நடிக்கின்றார்.
சில தினங்களுக்கு முன்னர் இத்தகவலை தனது டுவிட்டரில் நாகார்ஜூனா உறுதி செய்தார். தற்போது ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கவுள்ளன. நாகசைதன்யா நடிப்பில் பிரேமம், சஹசம் ஸ்வாஸஹா சகிபோ போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.